கடலாடி வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு ஆலோசனை கூட்டம்

சாயல்குடி, நவ. 18: கடலாடி வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கடலாடி வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் கடலாடி யூனியன் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு சேர்மன் முத்துலெட்சுமி தலைமை வகித்தார். ஆணையாளர் ஜெயஆனந்தன் முன்னிலை வகித்தார். வட்டார சமூகநல அலுவலர் சண்முக ராஜேஸ்வரி வரவேற்றார். மனநல ஆலோசகர் பெஸ்கி பிரபு குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விளக்கி பேசினார்.

மேலும் கடலாடி ஒன்றியத்திலுள்ள கிராமங்களில் அனைத்து குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்ப பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க வேண்டும், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், பெண் சிசு கொலை உள்ளிட்ட சட்டத்திற்கு புறம்பான செயல்களை தடுத்தல், கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டது. கூட்டத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர் வெள்ளைப்பாண்டியன் நன்றி கூறினார். வட்டார மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் மகேந்திர குமார், சைல்ட் ஹெல்ப் லைன் வழக்கு பணியாளர் முனியராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post கடலாடி வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: