க.பரமத்தி, சி.கூடலூரில் நிழற்குடை அமைக்க பூமி பூஜை

 

க.பரமத்தி, நவ. 10: கரூர் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் புதிய பயணியர் நிழல்குடை அமைக்க ரூ.8லட்சத்தில் பணிகள் தொடங்க பூமி பூஜை பணிகளை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தொடங்கிவைத்தார். க.பரமத்தி ஒன்றியத்தில் சி.கூடலூர் பகுதியில் புதிய பயணியர் நிழல்குடை வேண்டி அப்பகுதியினர் கோரிக்கை மனுவை கடந்த மாதங்களில் மக்களை சந்தித்து குறைகள் கேட்பு நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மற்றும் அதிகாரிகளிடம் ஆகியோரிடம் மனு அளித்திருந்தனர்.

பின்னர் மனு ஏற்கப்பட்டு தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் கூடலூர் பகுதியில் புதிய நிழல்குடை அமைக்க ரூ.8 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பூமிபூஜை நடைபெற்றது. க.பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருநீலகண்டன், (ஊராட்சிகள்) கிருஷ்ணமூர்த்தி, வட்டார தலைவரும் முன்னூர் ஊராட்சி தலைவருமான ராஜ்குமார், முன்னாள் நிர்வாகி நல்லசிவம் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட பொருளாளர் மெய்யானமூர்த்தி வரவேற்றார். கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தலைமை வகித்து பூமி பூஜை பணிகளை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

தொடர்ந்து ரெங்கபாளையம், பெரியதிருமங்கலம், கூடலூர் ஆகிய பகுதி அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு இணைய வழி கல்வி கற்க ஏதுவான ஸ்மார்ட் கிளாஸ் என தலா 2லட்சமும் என மொத்தம் ரூ.14 லட்சத்திற்கான பணிகள் தொடங்கிவைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நிர்வாகிகள் மாவட்ட, ஒன்றிய முக்கிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post க.பரமத்தி, சி.கூடலூரில் நிழற்குடை அமைக்க பூமி பூஜை appeared first on Dinakaran.

Related Stories: