சிவகங்கை அரசு கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம்

சிவகங்கை, நவ.8: சிவகங்கை மன்னர் துரைச்சிங்கம் அரசு கலைக்கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி சட்டமன்ற நாயகர் கலைஞர் எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் ராமமூர்த்தி வரவேற்றார். கல்லூரி முதல்வர் துரையரசன் தலைமை வகித்து கருத்தரங்கை தொடங்கி வைத்தார். விலங்கியல் துறைத்தலைவர் அழகுச்சாமி, வரலாற்றுத்துறை தலைவர் கலைச்செல்வி வாழ்த்தி பேசினர்.

தமிழ்த்துறை மா ணவ,மாணவிகள் பவித்ரா சட்டமன்ற உறுப்பினராக கலைஞர், பிரீத்தா அமைச்சராக கலைஞர், வல்லரசு எதிர்க்கட்சித் தலைவராக கலைஞர் எனும் தலைப்பிலும், வணிகவியல் துறை மாணவர் கோபிநாயகம் முதலமைச்சராக கலைஞர் எனும் தலைப்பிலும், வணிகவியல்துறை ஆய்வாளர் செந்திவேலம்மாள் தமிழ்மொழி வளர்ச்சியில் கலைஞரின் சட்டமன்ற பணிகள் எனும் தலைப்பிலும் பேசினர். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முத்துவேல் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

The post சிவகங்கை அரசு கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: