முழுக்கோடு ஊராட்சியில் சாலை பணி

அருமனை.நவ,8: முழுக்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட இரு சாலைகள் சீரமைக்கும் பணி நடக்கிறது. உத்திரன்கோடு முதல் சாண்டிப் பாறை வரை சுமார் 7 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கும், உத்திரன்கோடு முதல் மவுண்ட் கார்மல் சாலை வரை 24 லட்சம் ரூபாய்க்கும் பதினைந்தாவது நிதி குழு மானியம் வாயிலாக முதலமைச்சர் சாலை மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டு தற்போது பணிகள் துவங்கப் பட்டுள்ளன. இதில் 400 மீட்டர் தார் சாலையும், 200 மீட்டர் கான்கிரீட் சாலையாகவும் போடப்படுகிறது. சாலை பணியை ஊராட்சி தலைவர் மரிய செல்வி விலாசினி, துணைத் தலைவர் சசிகுமார், மேல்புறம் ஒன்றிய கவுன்சிலர் பேபி வார்டு உறுப்பினர் ஜெயா, ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

The post முழுக்கோடு ஊராட்சியில் சாலை பணி appeared first on Dinakaran.

Related Stories: