மேலும், ஸ்ரீ தர்மேஸ்வரர் கோயில், மற்றும் குடியிருப்பு வீடுகள் மத்தியில் அமைய உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை அப்பகுதி மக்கள் நடத்தினர். ஆனால் பொது மக்களின் எதிர்ப்பையும் மீறி டாஸ்மாக் கடை திறக்கபட்டது. தற்போது, இந்த டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமகன்கள் சாலையை ஆக்கிரமிப்பு செய்து வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால், இங்கு அடிக்கடி வாகன விபத்துக்களும், போக்குவரத்து பாதிக்கபட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று மணிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஐயப்பன், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம் மணிமங்கலம் அரசு டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.
The post மணிமங்கலம் கோயில், குடியிருப்பு பகுதியில் இயங்கிவரும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்: அமைச்சரிடம் மனு appeared first on Dinakaran.
