3 குற்றவியல் மசோதாக்கள் வரைவு அறிக்கையை நாடாளுமன்ற குழு ஏற்பு

புதுடெல்லி: குற்றவியல் சட்டத்திற்கு (ஐபிசி) பதிலாக பாரதிய நியாய சம்ஹிதா, குற்றவியல் நடைமுறை சட்டத்திற்கு பதிலாக பாரதிய நாக்ரீக் சுரக்ஷா மற்றும் இந்திய சாட்சிகள் சட்டத்திற்கு பதிலாக பாரதிய சாக் ஷ்யா ஆகிய 3 குற்றவியல் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாக்கள் நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த மசோதாக்கள் குறித்த வரைவு அறிக்கையை ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற குழு தயாரித்துள்ளது. இதை ஏற்றுக் கொள்வதற்கான நாடாளுமன்ற குழு கூட்டம் கடந்த மாதம் 27ம் தேதி நடந்தது. அப்போது, வரைவு அறிக்கையை படிக்க அவகாசம் வேண்டுமென எதிர்க்கட்சி எம்பிக்கள் கேட்டனர். இதைத் தொடர்ந்து, 10 நாள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், நாடாளுமன்ற குழு பாஜ எம்பி பிரிஜ் லால் தலைமையில் நேற்று மீண்டும் கூடியது.அப்போது, 3 குற்றவியல் மசோதாக்களுக்கான வரைவு அறிக்கையை குழு ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

The post 3 குற்றவியல் மசோதாக்கள் வரைவு அறிக்கையை நாடாளுமன்ற குழு ஏற்பு appeared first on Dinakaran.

Related Stories: