எக்கட்டாம்பாளையம் கிராமத்தில் விதைகள், பண்ணை கருவிகள் வழங்கல்

 

ஈரோடு, நவ. 4: சென்னிமலை அடுத்துள்ள எக்கட்டாம்பாளையத்தில் விதைகள் மற்றும் பண்ணை கருவிகள் வழங்கும் முகாம் நடைபெற்றது. சென்னிமலையை அடுத்த எக்கட்டாம்பாளையம் கிராமத்தில் உள்ள பட்டியலின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் கேரளா மாநிலம் திருச்சூரில் அமைந்துள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழக தாவர மரபணு மண்டல நிலையத்தின் சார்பாக வீட்டு தோட்ட பயிர் விதைகள் மற்றும் எளிய பண்ணை கருவிகள் வழங்கும் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் முதன்மை விஞ்ஞானி பிரதீப் முன்னிலை வகித்தார்.

மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மோகனசுந்தரம் கலந்துகொண்டு அங்ககச் சான்றின் முக்கியத்துவம் மற்றும் வீட்டு தோட்ட காய்கறி பயிரிடும் முறைகள், பயிர் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு முறைகள், நச்சு இல்லாத காய்கறி, கீரை, பழங்கள் உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து சிறப்புரை ஆற்றினார். மேலும் முதன்மை விஞ்ஞானி லதா, பராம்பரியமிக்க விதைகளை சேகரித்தல் மற்றும் சேமித்தல் குறித்து தெரிவித்தார். இம்முகாமில் 110 விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலாளர்களுக்கு காய்கறி விதைகள், பழச்செடி, கீரை விதைகள், கடப்பாரை, மண்வெட்டி, கொத்து மற்றும் ரப்பர் கூடை வழங்கப்பட்டது.

The post எக்கட்டாம்பாளையம் கிராமத்தில் விதைகள், பண்ணை கருவிகள் வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: