அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி

 

ஈரோடு, மே 28: ஈரோடு வஉசி பூங்கா வளாகத்தில் அரசு அருங்காட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் ஈரோடு மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில், வரலாற்றுத் துறையில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம். இதன்படி, நேற்று நாமக்கல் மற்றும் கோவை மாவட்டங்களை சேர்ந்த 2 கல்லூரிகளில் வரலாறு படிக்கும் மாணவிகளுக்கு உள் விளக்க பயிற்சி துவங்கியது.

80க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கான உள் விளக்க பயிற்சி நேற்று தொடங்கியது. இந்த பயிற்சியானது 15 நாட்கள் நடக்கும். இதில், அருங்காட்சியகம் பற்றிய விளக்கம், அருங்காட்சியகங்களின் வகைகள், கலை பண்பாடு வளர்ப்பதில் அருங்காட்சியகத்தின் பங்கு, சமுதாயத்தின் அருங்காட்சியகத்தின் பங்கு, அரும்பொருட்களான ஓலைச் சுவடிகள், நாணயங்கள், மர சிற்பங்கள் பாதுகாப்பு உள்ளிட்டவைகள் குறித்து, மாணவிகளுக்கு விளக்கப்படும் என அருங்காட்சியக காப்பாட்சியர் ஜென்சி தெரிவித்தார்.

 

The post அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: