ஆலத்தம்பாடி அரசு பெண்கள் பள்ளியில் முதல்வரின் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம்

 

திருத்துறைப்பூண்டி, நவ. 4: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆலத்தம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதலமைச்சரின் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் கிள்ளி வளவன் தலைமை வகித்தார். டாக்டர் ஆதேஷ், கண் மருத்துவ உதவியாளர்கள் இந்திரா, ஜெய காமாட்சி ஆகியோர் கலந்து கொண்டு 200 மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்தனர். மேலும் 23 மாணவிகளுக்கு இலவச கண் கண்ணாடி அரசு தரப்பில் வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டது. இதில் தலைமையாசிரியர் கலைச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

 

The post ஆலத்தம்பாடி அரசு பெண்கள் பள்ளியில் முதல்வரின் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: