5 மாநில தேர்தலில் காங். பிஸி இந்தியா கூட்டணியில் எதுவும் நடக்கவில்லை: நிதிஷ்குமார் பேச்சு

பாட்னா: இந்தியா கூட்டணியில் எதுவுமே நடைபெறவில்லை என்றும் 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் பிஸியாக இருக்கிறது என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறினார். அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜவை வீழ்த்த காங்கிரஸ் தலைமையில் 28 கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டது. இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் பாஜவை அகற்று, தேசத்தை காப்பாற்று என்பதை வலியுறுத்தி பாட்னாவில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொது செயலாளர் டி.ராஜா, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கலந்து கொண்டனர்.

இதில், நிதிஷ் பேசும்போது காங்கிரசை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசுகையில்,‘‘ பாஜவை எதிர்ப்பதற்காக தான் கூட்டணி அமைக்கப்பட்டது. தீவிர ஆலோசனைகளுக்கு பிறகே இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டது. சமீப நாட்களாக கூட்டணியில் எதுவுமே நடக்கவில்லை. காங்கிரஸ் கட்சி 5 மாநில தேர்தல்களில் தான் அதிக கவனம் செலுத்துகிறது. 5 மாநில தேர்தலுக்கு பின்னர் தான் கூட்டணி கட்சிகளின் கூட்டத்துக்கு அவர்கள் அழைப்பு விடுப்பார்கள் என தெரிகிறது’’ என்றார்.

The post 5 மாநில தேர்தலில் காங். பிஸி இந்தியா கூட்டணியில் எதுவும் நடக்கவில்லை: நிதிஷ்குமார் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: