பட்டுக்கோட்டை ரெங்கநாத பெருமாள் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை ரெங்கநாத பெருமாள் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் ரூ.5.4 லட்சம் வருவாய் கிடைத்தது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பெருமாள் கோயில் தெருவில் சுமார் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேவி பூமிதேவி சமேத  ரெங்கநாத பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் நின்ற திருக்கோலத்துடன் தேவி பூமிதேவி ஸமேதராய் ரெங்கநாத பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் என்பதும், இன்றளவிலும் இந்த கோயிலின் உட்பிரகாரம் வெளிப்பிரகாரம் மாமதில் கொண்ட மூன்றாவது பிரகாரம் என திருப்பதியில் கருவறை அமைத்து இருப்பது போல வைகானஸ பகவத் சாஸ்தர முறைப்படி அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில் இந்த ஆண்டு புரட்டாசி மாத பிரம்மோற்சவ திருவிழா வெகு சிறப்பாக நடந்து முடிந்தது. திருவிழா நிறைவடைந்ததையொட்டி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. கடந்த புரட்டாசி மாதத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்தனர்.

The post பட்டுக்கோட்டை ரெங்கநாத பெருமாள் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி appeared first on Dinakaran.

Related Stories: