தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் தூண்டில் வளைவு அமைக்க ரூ.93 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு..!!

சென்னை: தூத்துக்குடி அமலிநகர் மீன் இறங்குதளத்தில் தூண்டில் வளைவு அமைக்க ஒப்புதல் அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், 2022ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி அன்று நடைபெற்ற 2022-2023ம் நிதி ஆண்டிற்கான கால்நடை பராமரிப்பு பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மானியக் கோரிக்கையின்போது மாண்புமிகு மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம், அமலிநகர் மீன் இறங்குதளத்தில் கடல் அரிப்பினை தடுத்து படகுகளை பாதுகாப்பாக நிறுத்திட ஏதுவாக தூண்டில் வளைவுகள் அமைக்கவும், கன்னியாகுமரி மாவட்டம், கீழக்கடியப்பட்டணம் கிராமத்தை கடலரிப்பிலிருந்து பாதுகாத்திடவும், படகுகளை பாதுகாப்பாக நிறுத்திடவும், தூண்டில் வளைவுகள், படகு அணையும் தளம் மற்றம் அணுகு சாலைகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.

2. தூத்துக்குடி மாவட்டம், அமலிநகர் மீன் இறங்குதளத்தில் கடல் அரிப்பினை தடுத்து படகுகளை பாதுகாப்பாக நிறுத்திட ஏதுவாக தூண்டில் வளைவுகள் அமைக்கவும், கன்னியாகுமரி மாவட்டம் கீழக்கடியப்பட்டணம் கிராமத்தை கடலரிப்பிலிருந்து பாதுகாத்திடவும் படகுகளை பாதுகாப்பாக நிறுத்திடவும், தூண்டில் வளைவுகள் மற்றும் அணுகு சாலைகள் அமைக்கவும், மொத்தம் ரூ.93.00 கோடி நபார்டு திட்டத்தின்கீழ் நிருவாக ஒப்புதல் அளித்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

The post தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் தூண்டில் வளைவு அமைக்க ரூ.93 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு..!! appeared first on Dinakaran.

Related Stories: