தர்ஹா சந்தனக்கூடு விழா

 

ஒட்டன்சத்திரம், அக். 31: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், இடையகோட்டை முஹையத்தீன் ஆண்டவர் தர்ஹா சந்தனக்கூடு உருஸ் விழா அக்.16ம் தேதி திங்கள் கிழமை மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து அக்.26,27,28 ஆகிய மூன்று நாட்கள் சந்தனக்கூடு உருஸ் விழா நடைபெற்றது. மூன்று நாட்களிலும் சென்னை இசையரசு இறையன்பன் குத்தூஸ், திருச்சி எஸ்.எம்.யூசுப், திருச்சி கென்னடி இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நேற்று முன் தினம் அதிகாலை சந்தனம் வழங்கப்பட்டு, மாலை கொடி இறக்குதல் நடைபெற்றது. விழாவில் சென்னை ,பெங்களூர், மேட்டுப்பாளையம், பள்ளபட்டி, அரவக்குறிச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் உள்ளிட்ட அனைத்து சமுதாய பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

The post தர்ஹா சந்தனக்கூடு விழா appeared first on Dinakaran.

Related Stories: