உத்திரமேரூர் அருகே சிறப்பு மருத்துவ முகாம்: எம்எல்ஏ பங்கேற்பு

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த நல்லூர் கிராமத்தில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. இம்முகாமை காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், பேரூராட்சி மன்றத் தலைவர் பொன்.சசிகுமார், நகர செயலாளர் பாரிவள்ளல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 17வது வார்டு உறுப்பினரும், மாவட்ட பிரதிநிதியுமான குணசேகரன் அனைவரையும் வரவேற்றார்.

முகாமில் சர்க்கரை நோய், உப்பு பரிசோதனை, அறுவை சிகிச்சை பரிசோதனை, இருதய நோய், காது, மூக்கு, தொண்டை, தோல் சிகிச்சை, குழந்தை மற்றும் பெண்கள் சிறப்பு மருத்துவம், எலும்பு சிகிச்சை, சித்தமருத்துவம் பொது மருத்துவம் போன்ற பல்வேறு வகையிலான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.  முகாமில், மீனாட்சி நிகர்நிலை மருத்துவ கல்லூரி மருத்துவமனை சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.

முகாமில் நல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். சிகிச்சை பெற்ற அனைவருக்கு இலவச மருந்து மாத்திரைகள் வழங்கி ஆலோசனைகள் வழங்கப்பட்டது. சிகிச்சை பெற்றவர்களில் 28 நபர்கள் மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். இந்நிகழ்ச்சியில், இளைஞரணி நிர்வாகி அன்புராஜா உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

The post உத்திரமேரூர் அருகே சிறப்பு மருத்துவ முகாம்: எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: