பொன்னேரி அருகே அம்மன் கோயிலில் மழைவேண்டி சிறப்பு வழிபாடு

பொன்னேரி: பொன்னேரி அருகே அருள்மிகு ஸ்ரீ பரிவட்டம்மன் கோயிலில் நேற்று மாலை மழைவேண்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பொன்னேரி அருகே பரிக்குப்பட்டு கிராமத்தில் எழுந்தருளியுள்ள புகழ்பெற்ற மிகப் பழமையான அருள்மிகு ஸ்ரீ பரிவட்டம்மன் திருக்கோயிலில் கடந்த மாதம் 3ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 48 நாட்கள் முடிந்ததால் நேற்று அக்கோயில் வளாகத்தில் மண்டல பூஜை நடைபெற்றது.

மேலும், ஐப்பசி மாதம் துவங்கி இதுவரை மழை பெய்யாததால், மழையை நம்பி விவசாயம் செய்யும் மக்கள், தண்ணீரின்றி வாடும் நெற்பயிர்களைப் பார்த்து கண்ணீர் வடிக்கின்றனர். இதைத் தொடர்ந்து, நேற்று மாலை பரிவட்டம்மனுக்கு மழைவேண்டி வாடை பொங்கல் வைத்து 100க்கும் மேற்பட்ட மக்கள் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர். பின்னர் அனைவரும் அம்மனை தரிசித்து, ஊர்மக்கள் ஒன்றுதிரண்டு படையல் வைக்கப்பட்ட வாடை பொங்கலை உண்டு மகிழ்ந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

The post பொன்னேரி அருகே அம்மன் கோயிலில் மழைவேண்டி சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: