கர்நாடக முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா, ஆந்திரா மாநில பாஜ தலைவர் புரந்தரேஸ்வரி, மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனரும், எம்பியுமான சத்யபால் சிங், பெங்களூர் எம்.பி. மோகன் ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர். சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் இக் குழு நேற்று நிர்வாகிகளை சந்தித்து பேசியது. கைது செய்யப்பட்டுள்ள பாஜவினர் இல்லங்களுக்கு சென்றனர். மேலும் பனையூரில் உள்ள அண்ணாமலை வீட்டின் அருகே கொடிக் கம்பம் அகற்றப்பட்ட இடத்தையும் நேரில் பார்வையிட்டனர். தொடர்ந்து நேற்று பிற்பகல் பாஜ குழுவினர் சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் புகார் மனு அளித்ததாக கூறப்படுகிறது.
The post சென்னையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியுடன் பாஜ மேலிட குழு சந்திப்பு appeared first on Dinakaran.
