முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை அருகே நடந்த வட்டார கலை திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. முத்துப்பேட்டையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றது. பெத்தவேளாண்கோட்டகம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சார்பில் கலந்து கொண்ட மாணவர்கள் நுண்கலை, வாத்திய கருவிகள் வாசித்தல், பேச்சு, கட்டுரை, கதை எழுதுதல் (ஆங்கிலம்) மற்றும் கதை சொல்லுதல் போன்ற போட்டிகளில், ஹரிஷ், சக்தி கபிலேஷ், அஸ்வினி, தமிழ்ச்செல்வி, சுப பிரித்திக்ஷா, உதய நிலா ஆகிய மாணவ மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களை பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் மற்றும் வழிகாட்டி ஆசிரியருமாகிய சாந்தி ஷெரின், ஆசிரியர்கள் ரோஸ்லெட், ரவிச்சந்திரன், ராஜகுமாரன், மற்றும் சுந்தரமூர்த்தி ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர். பள்ளி மேலாண்மை குழு தலைவி பானுப்பிரியா உள்ளிட்டோர் வெற்றி பெற்ற மாணவர்களையும் அதற்கு ஊக்கமளித்த ஆசிரியர்களையும் பாராட்டி வாழ்த்திப் பேசினர். இதில் பள்ளி நிர்வாகிகள், கிராம முக்கிய பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
The post திருவாரூர் முத்துப்பேட்டை அருகே வட்டார கலை திருவிழா போட்டி appeared first on Dinakaran.
