கிரானைட், கருங்கற்கள் கடத்திய 2 லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கனிம வள சிறப்பு தாசில்தார் கோகுல கிருஷ்ணா மற்றும் அதிகாரிகள், கிருஷ்ணகிரி அருகே கொண்டேபள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கம்பி வேலி அமைக்க கருங்கல் ஏற்றி வந்த லாரியை நிறுத்த முயன்றனர். ஆனால், லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பியோடி விட்டார். இதையடுத்து கற்களுடன் லாரியை பறிமுதல் செய்து, தாலுகா போலீசில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அதே போல், பர்கூர் அருகே கொண்டநாயக்கன் பஸ் நிறுத்தம் பகுதியில், கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரியை நிறுத்த முயன்ற போது, டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். இதைத்தொடர்ந்து ₹77ஆயிரம் மதிப்பிலான கிரானைட் கற்கள் மற்றும் லாரியை பறிமுதல் செய்து, பர்கூர் போலீசில் ஒப்படைத்தனர். லாரியின் உரிமையாளர் மற்றும் டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

The post கிரானைட், கருங்கற்கள் கடத்திய 2 லாரி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: