திருக்கழுக்குன்றம் தொண்டனார் தீர்த்த குளம் ₹69 லட்சம் மதிப்பீட்டில் சீரமைப்பு: பேரூராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்

திருக்கழுக்குன்றம், அக்.27: திருக்கழுக்குன்றத்தில் உள்ள தொண்டனார் தீர்த்த குளம், ₹69 லட்சம் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகளை பேரூராட்சி தலைவர் யுவராஜ் தொடங்கி வைத்தார். திருக்கழுக்குன்றத்தில் மொத்தமுள்ள 12 புண்ணிய தீர்த்தங்களில் ஒன்றான பரமசிவம் நகர் பகுதியில் பழமையான தொண்டனார் தீர்த்தக்குளம் உள்ளது. இதன் கரைகள் சேதமடைந்தும், கோரை புட்கள் முளைத்தும், தண்ணீர் மாசுபட்டு காணப்பட்டது. இந்த குளத்தை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்ததினர். அதன்பேரில், குளத்தை சீரமைத்து மேம்படுத்த, அம்ரூத் (2.0) திட்டத்தின் கீழ் ₹69 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டநிலையில், குளத்தின் சீரமைப்பு பணி நேற்று துவங்கியது. இதனை, திருக்கழுக்குன்றம் பேரூராட்சி மன்ற தலைவர் ஜி.டி.யுவராஜ் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில், பேரூராட்சி கவுன்சிலர்கள் சத்தியமூர்த்தி, நரசிம்மன் மற்றும் திமுக நிர்வாகிகள் செங்குட்டுவன், சரவணன், இளங்கோ, பாளையம், சீனு மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருக்கழுக்குன்றம் தொண்டனார் தீர்த்த குளம் ₹69 லட்சம் மதிப்பீட்டில் சீரமைப்பு: பேரூராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: