கங்கைகொண்டான் சிப்காட் காவலாளி மீது தாக்குதல் வடமாநில தொழிலாளர்கள் 7 பேர் கைது

நெல்லை, அக். 27: நெல்லை கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பேட்டையில் ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தொழிலாளர்கள் தங்கியுள்ள கட்டிடத்தில் நேற்று முன்தினம் வடமாநில தொழிலாளர்களிடையே தகராறு ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தனியார் நிறுவனத்தின் செக்யூரிட்டியான பாளை திருத்து கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (23) என்பவர் மோதலை தடுக்க முயன்றார். அப்போது தொழிலாளர்கள், அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாலகிருஷ்ணனுக்கு ஆதரவாக சக செக்யூரிட்டிகள் தட்டிகேட்டபோது அவர்களையும் வடமாநில தொழிலாளர்கள் மிரட்டியுள்ளனர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த பாலகிருஷ்ணன், நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கங்கைகொண்டான் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி மற்றும் போலீசார் வழக்கு பதிந்து தாக்குதல் மற்றும் மிரட்டல் விடுத்ததாக ஜார்க்கண்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் பிரதாப், ராஜகுமார், ராகுல், பரஸ்ராம், திலக், மனீஸ்குமார், பிட்பிரயான் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கங்கைகொண்டான் சிப்காட் காவலாளி மீது தாக்குதல் வடமாநில தொழிலாளர்கள் 7 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: