உச்ச நீதிமன்றம் காட்டம் உபி. அரசு அதிகாரிகள் மிக திமிர் பிடித்தவர்கள்

புதுடெல்லி: ‘உபி அரசின் உயர் அதிகாரிகள் மிக திமிர் பிடித்தவர்கள்’ என உச்ச நீதிமன்றம், கடுமையாக விமர்சித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், அலகாபாத்தை சேர்ந்த அரசு ஊழியர் சம்பள நிலுவைத் தொகை வழங்கக் கோரியும், பணியை முறைப்படுத்தக் கோரியும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். இந்த வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம், கடந்த 1ம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘நீதிமன்றத்தை அரசு அதிகாரிகள் விளையாட்டுத்தனமாக கருதி உள்ளனர். அரசு தரப்பு வக்கீல் அளித்த வாக்குறுதியை மீறி, மனுதாரருக்கு சம்பள நிலுவைத் தொகை தராமல் நீதிமன்றத்திற்கு தவறான தகவலும் தந்துள்ளனர். இதற்காக, மாநில நிதிச் செயலாளர் மற்றும் கூடுதல் தலைமை செயலாளர் (வருவாய்) ஆகியோருக்கு எதிராக ஜாமீனில் விடுவிக்கக் கூடிய பிடிவாரன்ட் பிறப்பிக்க  வேண்டும்,’ என அதிரடியாக கூறினர்.அதிகாரிகள் கைது செய்யப்படுவதை தடுக்க உபி அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை தள்ளுபடி செய்த தலைமை நீதிபதி, ‘‘அலகாபாத் நீதிமன்றம் உங்களிடம் மிக மென்மையாக நடந்து கொண்டுள்ளது. ஊழியரின் பணியை முறைப்படுத்தாமல், சம்பள நிலுவையையும் வழங்க மறுக்கிறீர்கள். நீதிமன்ற உத்தரவை நீங்கள் மதிக்காத போதும், உங்களிடம் நீதிமன்றம் கரிசனம் காட்டி உள்ளது. நியாயமாக பார்த்தால், அதிகாரிகளை கைது செய்ய உத்தரவிட்டிருக்க வேண்டும். கூடுதல் தலைமை செயலாளர் மிக திமிர்பிடித்தவராக தெரிகிறார். நீங்கள் கைது செய்யப்பட்டு ஆஜர்படுத்தப்பட்ட பிறகு உங்கள் தரப்பு நியாயங்களை பேசுங்கள். வழக்கை தள்ளுபடி செய்கிறோம்,’ என உத்தரவு பிறப்பித்தார். இதனால், அதிகாரிகள் கைதாவதை தடுக்கும் உபி அரசின் முயற்சி முழுமையாக தோல்வி அடைந்துள்ளது….

The post உச்ச நீதிமன்றம் காட்டம் உபி. அரசு அதிகாரிகள் மிக திமிர் பிடித்தவர்கள் appeared first on Dinakaran.

Related Stories: