தென்காசி தர்ஹா கந்தூரி கொடிகட்டு ஊர்வலம்

தென்காசி,அக்.25: தென்காசி அஹமதுஷா ஹாஜா தர்ஹா கந்தூரி கொடிகட்டு ஊர்வலம் நடந்தது. தென்காசி அஹமதுஷா ஹாஜா தர்ஹா கந்தூரி விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு கந்தூரி கொடிக்கட்டு ஊர்வலம் நேற்று காலையில் நடந்தது. இதனை நகர்மன்ற தலைவர் சாதிர், நகர்மன்ற துணை தலைவர் கே.என்.எல்.சுப்பையா துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் அபூபக்கர், ஆனந்தபவன் காதர் மைதீன், முத்து கிருஷ்ணன், அஹமதுஷாஹாஜா தர்ஹா தலைவர் ரெசவப்பா, செயலாளர் செய்யது சுலைமான், அமானுல்லா, பஷீர், ஜெய்லானி, அசன்கனி மற்றும் திமுக நிர்வாகிகள் பொருளாளர் பரீத், மாணவரணி மைதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தென்காசி தர்ஹா கந்தூரி கொடிகட்டு ஊர்வலம் appeared first on Dinakaran.

Related Stories: