பூண்டி கிழக்கு ஒன்றியத்தில் புரட்சி பாரதம் செயற்குழு கூட்டம்: எம்எல்ஏ பங்கேற்பு

திருவள்ளூர்: பூண்டி கிழக்கு ஒன்றிய புரட்சி பாரதம் செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் பூவை எம்.ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ சிறப்புரையாற்றினார். திருவள்ளூர் மத்திய மாவட்டம், பூண்டி கிழக்கு ஒன்றிய புரட்சி பாரதம் கட்சியின் செயற்குழு கூட்டம் போந்தவாக்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் பாரதி, ஒன்றியச் செயலாளர் லட்சுமிகாந்தன், ஒன்றிய பொருளாளர் ரகு ஆகியோர் தலைமை தாங்கினார்.

மாவட்டத் தலைவர் பிரீஸ் ஜி.பன்னீர், மாவட்டச் செயலாளர் கூடப்பாக்கம் குட்டி, பொருளாளர் நயப்பாக்கம் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் காயத்திரி லட்சுமிகாந்தன் அனைவரையும் வரவேற்றார். கட்சியின் தலைவரும், கே.வி.குப்பம் எம்எல்ஏவுமான பூவை எம்.ஜெகன் மூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பல்வேறு இடங்களில் கட்சியின் கொடியினை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து செயற்குழு கூட்டத்தில் அவர் சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவரை மாவட்ட இளைஞரணி தலைவர் செஞ்சி ஜவகர், மாவட்ட தொழிற்சங்க துணைச் செயலாளர் ஒதப்பை துளசிராமன் ஆகியோர் ஆளுயர ரோஜா மாலை அணிவித்து வரவேற்றனர். இதில் கட்சியின் முதன்மை செயலாளர் ருசேந்திரகுமார், மாநில நிர்வாகிகள் மாறன், பூங்காநகர் காமராஜ், தளபதி செல்வம், பூண்டி பாபு, சத்திய சுந்தர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தொழுவூர் கோபிநாத், மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் மோகன்ராஜ், பிரசாந்த், குமரேசன், நிஜாமுதீன், புதுமா தமிழரசு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

The post பூண்டி கிழக்கு ஒன்றியத்தில் புரட்சி பாரதம் செயற்குழு கூட்டம்: எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: