பூ மார்க்கெட்டில் பூ விற்பனை அமோகம்

கரூர்: ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு கரூர் பூ மார்க்கெட்டில் நேற்று அதிகளவு மக்கள் குவிந்ததால் பூ மார்க்கெட் வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான சரஸ்வதி பூஜை விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அறிவு, ஞானம், கலை மற்றும் கல்வியின் அடையாளமாக கொண்டாடப்படும் இந்த விழாவானது ஆயுத பூஜை விழா, நவராத்திரி விழா என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. அதன்படி ஆயுத பூஜையை யொட்டி வீடுகளில் ஒட்டடை அடித்து சுத்தம் செய்து வர்ணங்கள் தீட்டப்படும். இதேபோல் ஆயுத பூஜை நாளில் வாகனங்கள், இயந்திரங்கள் உட்பட அனைத்தும் கழுவி சுத்தம் செய்யப்பட்டு அதற்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். மேலும் இந்த நவராத்திரி விழாவையொட்டி கோயில்களில் தொடர்ந்து 10 நாட்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது மட்டுமின்றி வீடுகளிலும் கொழு பொம்மைகள் வைக்கப்பட்டு கொண்டாடப்படடு வதும் வழக்கமாக இருந்து வருகிறது. அவ்வாறு வைக்கப்படும் கொழு பொம்மைகளை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் கண்டு களிப்பாகள்ர். அதன்படி நடப்பாண்டில் இந்த ஆயுத பூஜை இன்று (23ந்தேதி) நடைபெறுகிறது. நிலையில் கடந்த 15ந்தேதி முதல் நவராத்திரி விழா துவங்கியது.

The post பூ மார்க்கெட்டில் பூ விற்பனை அமோகம் appeared first on Dinakaran.

Related Stories: