இதற்காக புரோக்கர் சபரிநாதன் மூலமாக, சார்பதிவாளர் ரூ.1.50 லட்சம் கேட்டார். அந்த பணமும் கொடுக்கப்பட்டது. இதற்கான அசல் பத்திரத்தை கேட்ட போது, மேலும் ரூ.50 ஆயிரம் கேட்டு தர மறுத்து விட்டார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதையடுத்து சார்பதிவாளர் அல்லாபகஷ், புரோக்கர் சபரிநாதன் ஆகியோர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு, சார் பதிவாளர் அல்லாபகஷ், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவரது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், அவரை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்த சார் பதிவாளர் அல்லாபகஷை, நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
The post ஐேகார்ட் உத்தரவின்படி நடவடிக்கை ரூ.50,000 லஞ்ச வழக்கு சார்பதிவாளர் கைது appeared first on Dinakaran.