மாநில எறிபந்து போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு

பரமக்குடி, அக்.20: பரமக்குடி அருகே பெருமாள்கோவில் அரசு மேல்நிலை பள்ளி 6, 7-ம் வகுப்பு பயிலும் மாணவியர்கள் கவிப்பிரியா, மோனிகாதேவி, குணநவிதா, அகிலா பானு, சத்தியபிரியா, வர்ஷினி, லாவண்யா, விஜயஸ்ஸ்ரீரூபிகா, ரூபாகிருஷ்ணா. இவர்கள், மாவட்ட அளவில் மண்டபம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 17 வயதிற்கு உட்பட்ட எறிபந்து போட்டியில் கலந்துகொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தனர்.

இதனால், அடுத்த மாதம் மாநில அளவில் கோவையில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவிகளுக்கும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியை மரிய ஆக்னஸ் ஆகியோருக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி, பெருமாள்கோவில் பள்ளி தலைமை ஆசிரியர் திருநீலகண்டபூபதி, கீழ முஸ்லிம் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அன்வர், காடர்ந்தகுடி பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பெருமாள் மற்றும் பெருமாள் கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், கிராமத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.

The post மாநில எறிபந்து போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: