மணியாச்சி கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் கல்வி திட்ட முகாம்

நெல்லை, அக். 20: மணியாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் கல்வி திட்ட முகாம் நடந்தது. கோவில்பட்டி சரக துணை பதிவாளர் சுப்புராஜ் தலைமை வகித்து கூட்டுறவு சங்கத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சேவைகள் குறித்து விளக்கினார். மேலும் 48 பேருக்கு ரூ.35.20 லட்சத்தில் விவசாய பயிர்க்கடனுக்கான விண்ணப்பத்தை வழங்கினார். சங்கத்தின் செயலாட்சியர் – கூட்டுறவு சார் பதிவாளர் பாலமுருகன் வரவேற்றார். தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியர் சாம் டேனியல் ராஜ், சங்க உறுப்பினர்களுக்கு கூட்டுறவு துறையின் திட்டங்கள், கூட்டுறவு சங்கத்தின் நோக்கங்கள் மற்றும் உறுப்பினர் கல்வி திட்டத்தின் முக்கியத்துவம் பற்றியும் விளக்கி கூறினார். மதுரை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி கழக விரிவுரையாளர் கதிரவன், புதிய உறுப்பினர் சேர்க்கையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். முகாமில் கோவில்பட்டி துணை பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் சங்கப் பணியாளர்கள் உள்பட 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சங்கத்தின் செயலாளர் தம்பிராஜ் நன்றி கூறினார்.

The post மணியாச்சி கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் கல்வி திட்ட முகாம் appeared first on Dinakaran.

Related Stories: