காவிரியில் நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக எல்லைக்குள் நுழைந்து கன்னட அமைப்பு ஆர்ப்பாட்டம்: குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது

ஓசூர்: கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் தரக்கூடாது என வலியுறுத்தி, கன்னட அமைப்புகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில், வாட்டாள் நாகராஜ் தலைமையில், கன்னட ரட்சண வேதிகே அமைப்பினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென அத்திப்பள்ளியில் இருந்து தமிழக எல்லையான ஓசூர் அடுத்த ஜூஜூவாடியில் நுழைந்து, கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கர்நாடக மாநில போலீசார், அவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர்.

The post காவிரியில் நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக எல்லைக்குள் நுழைந்து கன்னட அமைப்பு ஆர்ப்பாட்டம்: குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது appeared first on Dinakaran.

Related Stories: