சில்லி பாயிண்ட்

சான்ட்னர் 100

* நியூசிலாந்து அணிக்காக ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட் கைப்பற்றிய ஸ்பின்னர்கள் பட்டியலில் மிட்செல் சான்ட்னர் இணைந்துள்ளார். நேற்று அவர் கைப்பற்றிய முகமது நபியின் விக்கெட் அவரது 100வது விக்கெட்டாக அமைந்தது. மிட்செல் சான்ட்னர் 2வது இடத்தை பிடிக்க முதல் இடத்தில் இருக்கும் முன்னாள் நட்சத்திரம் டேனியல் வெட்டோரி 305 விக்கெட் அள்ளியுள்ளார்.

* நியூசி. – ஆப்கான் மோதலை பார்க்க நேற்று தனியார் பள்ளி மாணவர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ் நாடு கிரிக்கெட் சங்கம் செய்திருந்தது.

* காயம் காரணமாக முதல் 2 ஆட்டங்களில் விளையாடத நியூசி. கேப்டன் கேன் வில்லியம்சன் சில நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் களம் கண்டார். அந்த ஆட்டத்தின்போது கட்டைவிரலில் எலும்புமுறிவு ஏற்பட்டதால் நேற்றைய ஆட்டத்தில் வில்லியம்சன் களம் இறங்கவில்லை. அவருக்கு பதிலாக வில்லியம் யங் களமிறங்கினர். டாம் லாதம் மீண்டும் கேப்டனாக பணியாற்றினார்.

* நியூசி. நேற்று பவர் பிளேவில் 37/1 ரன் எடுத்தது. சென்னையில் ஏற்கனவே நடந்த வங்கதேசத்துடனான ஆட்டத்தின் பவர் பிளேவிலும் நியூசி 37/1 ரன் எடுத்தது. முதல் 2ஆட்டங்களின் பவர் பிளேவில் விக்கெட் இழப்பின்றி முறையே இங்கிலாந்துக்கு எதிராக 81, நெதர்லாந்துக்கு எதிராக 63 ரன் எடுத்திருந்தது.

* உலக கோப்பையில் அதிக முறை 50+ரன் எடுத்த விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள பிராண்டன் மெக்கல்லம் சாதனையை டாம் லாதம் நேற்று சமன் செய்தார். இருவரும் தலா 3 முறை அரை சதத்துக்கு மேல் ரன் குவித்து உள்ளனர்.

* உலக கோப்பையில் நியூசி. அணிக்காக 5வது விக்கெட் அல்லது அதற்கு குறைவான விக்கெட்டுக்கு அதிக ரன் (144) சேர்த்த 2வது ஜோடி என்ற பெருமையை டாம் லாதம் – கிளென் பிலிப்ஸ் இணை பெற்றது. முதல் இடத்தில் கிறிஸ் கெய்ன்ஸ் – ஆர்.ட்வஸ் (148) இணை பெற்றுள்ளது. இவர்கள் 1999ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்த சாதனையை நிகழ்த்தினர்.

The post சில்லி பாயிண்ட் appeared first on Dinakaran.

Related Stories: