முத்துப்பேட்டையில் கலைத் திருவிழா ஒருங்கிணைப்பு கூட்டம்

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை வட்டார வள மைய அலுவலகத்தில் கலைத் திருவிழா ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பு தலைவர் எடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அமுதராசு தலைமை வகித்தார். செயலாளர் வட்டாரக்கல்வி அலுவலர்கள் சிவக்குமார், ராமசாமி, மேற்பார்வையாளர் இளையராஜா, உறுப்பினர்கள் தமிழாசிரியர் ராதா மருதங்காவெளி தலைமை ஆசிரியர் சோமு, ஆசிரிய பயிற்றுநர் சுரேஷ், தர், அன்புராணி, ஆசிரியர் தினேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் ஒன்றிய அளவில் மருதங்காவெளி பள்ளியில் அக்.18, 19, 20 ஆகிய மூன்று நாள்கள் கவின்கலை, நுண்கலை, இசை (வாய்பாட்டு), கருவி இசை, நடனம், நாடகம், மொழித்திறன் போட்டிகள் நடைபெற உள்ளது. அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் பதிவு செய்த மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஆபத்தான நிகழ்வுகள் உள்ள போட்டிகள் கிடையாது. எளிதில் தீப்பற்றும் பொருட்களுக்கு உள்ளே அனுமதி கிடையாது. பார்வையாளர்கள் பெற்றோர் அனுமதி கிடையாது. போட்டியை வெற்றிகரமாக நடத்த தீர்மானிக்கப்பட்டது. முடிவில் இளையராஜா நன்றி கூறினார்.

The post முத்துப்பேட்டையில் கலைத் திருவிழா ஒருங்கிணைப்பு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: