தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகராட்சி என்.கிட்டப்பா அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை பள்ளி, மாணவ, மாணவியர்கள், பார்வையிட்டனர். இப்புகைப்பட கண்காட்சியில், தமிழ்நாடு முதலமைச்சரால் துவக்கி வைத்த புதிய திட்டங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியது குறித்த புகைப்படங்கள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும், தமிழ்நாடு அரசின் பல்வேறு சிறப்பு திட்டங்களான, மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம். இல்லம் தேடிக் கல்வி. கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம், முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித்தோட்டம் மற்றும் மாடித் தோட்டம் அமைக்க காய்கறி விதைகள் வழங்குதல், விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள் வழங்குதல், விவசாயிகளுக்கு 1 இலட்சம் மின் இணைப்பு வழங்கும் திட்டம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பள்ளி மாணவர்களுக்கு வாளனில் திட்டம், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு நொழில் சார் கடலுதவிகள் வழங்குதல், மீண்டும் மஞ்சப்பை, புதிய நோழில் புரிந்துணர்வு ஒப்பந்தம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், எண்ணும் எழுந்தும் திட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் புகைப்படங்கள். மேலும், சுற்றுச்சூழல் காலநிலையாற்றத்துத்துறை அமைச்சர் மற்றும் பிற துறை அமைச்சர் பெருமக்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. இப்புகைப்பட கண்காட்சியை பள்ளி மாணவ, மாணவியர்கள் பார்வையிட்டனர்.

The post தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி appeared first on Dinakaran.

Related Stories: