அத்திபள்ளி பட்டாசு கடை விபத்து எதிரொலி தாசில்தார் உட்பட 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்: கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை

பெங்களூரு: பெங்களூரு-ஓசூர் எல்லை அத்திப்பள்ளி பட்டாசு கடையில் கடந்த வாரம் ஏற்பட்ட வெடிவிபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த விபத்து குறித்து பெங்களூரு விதானசவுதா சட்டமன்ற வளாகத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அத்திபள்ளி பட்டாசு விபத்து குறித்து முதற்கட்ட விசாரணை குறித்தான அறிக்கையை முதல்வரிடம் தாக்கல் செய்தனர். முதற்கட்ட விசாரணையில் வெடி விபத்து ஏற்பட்ட கடை பெயரில் மூன்று லைசென்ஸ்கள் இருந்துள்ளது அதில் இரண்டு உரிமங்கள் மட்டுமே உண்மையாக பெறப்பட்டிருந்த நிலையில் மூன்றாவது உரிமம் போலியாக தயாரிக்கப்பட்டு சட்ட விரோதமாக அங்கு குடோன் அமைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல அத்துமீறல்கள் வெளியாகி உள்ள நிலையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தின் முடிவில் விபத்து நடைபெற்ற பகுதியின் தீயணைப்புத்துறை வட்டார அதிகாரி, தாசில்தார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து முடிவு செய்யப்பட்டது.

The post அத்திபள்ளி பட்டாசு கடை விபத்து எதிரொலி தாசில்தார் உட்பட 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்: கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: