காவிரி நீர்திறப்பு குறைப்பால் கருகிய நெற்பயிர்கள்: பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

மயிலாடுதுறை: கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய காவிரி பங்கு நீரை தராததால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள விலை நிலங்களில் நெற்பயிர்கள் கருகியதால் விவசாயிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 80,000 ஏக்கரில் சம்பா, தாளடி நடவு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டனர். ஆனால் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய காவிரி நீரை கர்நாடகம் தர மறுத்ததால் நிலத்தடி நீரை கொண்டு நடவு பணிகள் நடைபெற்றன.

இந்நிலையில் பொன்னூர், கட்டளச்சேரி, பாண்டூர் உள்ளிட்ட 50கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீரின் தன்மை மாறி 250க்கும் மேற்பட்ட ஏக்கர்கள் சம்பா பயிர்கள் கருகி வருகிறது. சம்பா பயிர்கள் நட்டு ஒரு மாதம் ஆகியுள்ள நிலைமையில் பயிர்கள் ஒரு அடி அளவிற்கு வளர்ந்திருக்க வேண்டும். ஆனால் காவிரியில் தண்ணீர் வராததாலும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மழைபொழிவு இல்லாததாலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

இதனால் பம்புசெட்டுகளில் தண்ணீர் அளவு குறைந்து உப்புக்கரைசலாக வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஏக்கருக்கு ரூ.20 செலவு செய்து விவசாயம் செய்த போதும் பயிர்கள் வளராமல் கருகிவருவது வேதனையளிக்கிறது என்றும் வேளாண் அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post காவிரி நீர்திறப்பு குறைப்பால் கருகிய நெற்பயிர்கள்: பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: