தமிழ்நாடு சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டம் தொடங்கியது.! இன்று 7 மசோதாக்கள் தாக்கல் செய்யபடவுள்ளதாக தகவல்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டம் இன்று தொடங்கியது. 2023-24 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் சட்டப்பேரவையில் இன்று நடைபெறும் என்று தெரிகிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் மறைந்த முன்னாள் உறுப்பினர் ராஜேந்திரன் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அதேசமயம் சமாதானம் என்னும் புதிய திட்டத்திற்கான சட்டம் உன் வடிவை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி இன்று தாக்கல் செய்கிறார். முன்னதாக நேற்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாடுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது குறிப்பித்தக்கது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று 7 மசோதாக்கள் தாக்கல் செய்யபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2ம் நாள் கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதில் அளிக்கின்றனர். தமிழ்நாடு சம்பளம் வழங்குதல் திருத்த சட்ட மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைக்கிறார்.

The post தமிழ்நாடு சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டம் தொடங்கியது.! இன்று 7 மசோதாக்கள் தாக்கல் செய்யபடவுள்ளதாக தகவல் appeared first on Dinakaran.

Related Stories: