ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கம், தற்போது ஒரத்தநாடு எம்.எல்.ஏ.வாக உள்ளார். அறப்போர் இயக்கம் அளித்த புகாரில் வைத்திலிங்கம் உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. பெருங்களத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்ட அனுமதி வழங்க லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. 2011-16-ல் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது ரூ.26.90 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
பெருங்களத்தூரில் ஸ்ரீராம் குழுமத்துக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்துக்கு 57.94 ஏக்கர் நிலம் உள்ளது. 57.94 ஏக்கர் நிலத்தில் 1,453 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்ட 2013-ல் சி.எம்.டி.ஏ.விடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. 2013-ல் ஸ்ரீராம் குழுமம் விண்ணப்பித்த நிலையில் 2 ஆண்டுகளாக அனுமதி வழங்கப்படவில்லை. 2016-ல் ஸ்ரீராம் குழுமத்துக்கு திடீரென அனுமதி வழங்கியதன் மூலம் பெருமளவு லஞ்சம் வழங்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீராம் குழுமத்தின் பாரத் கோல் கெமிக்கல் நிறுவனத்தின் மூலம் வைத்திலிங்கத்துக்கு லஞ்சம் கைமாறியதாக தகவல் வெளியாகியது.
வைத்தியலிங்கத்தின் மகன்கள் இயக்குநர்களாக உள்ள முத்தம்மாள் எஸ்டேட் நிறுவனத்துக்கு லஞ்சம் கைமாறியதாக தகவல் வெளியாகி உள்ளது. ரூ.27 கோடி லஞ்சம் முத்தம்மாள் எஸ்டேட் நிறுவனத்துக்கு கடனாக வழங்கப்பட்டது போல் காட்டப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டது. கடன் பெற்ற முத்தம்மாள் எஸ்டேட் நிறுவனம் 2014-ல் இருந்து ஒரு ரூபாய் கூட வணிகம் செய்யாதது ஐ.டி தாக்கலில் அம்பலம் ஆனது தெரியவந்துள்ளது. எனவே வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ரூ.27 கோடி லஞ்சம்: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.