சென்னை: நீதித்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நிரந்தர பணியாளர்கள் பெறும் ஊதிய உயர்வு உள்ளிட்ட சலுகைகள் தற்காலிக பணியாளர்களுக்கு இல்லை. கீழமை நீதிமன்றங்களில் பணிபுரியும் 907 தற்காலிக பணியாளர்கள் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.