கருங்குழி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் பயிற்சி முகாம்

 

மதுராந்தகம்: கருங்குழி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் திட்டத்தின் மூலம் மாவட்ட அளவிலான பயிற்சி முகாம் நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக மாவட்ட அளவிலான பேரூராட்சிகளின் கணக்கெடுப்பாளர்கள், சரிபார்ப்புக் குழுவினர், கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளர் குழுவினர் உள்ளிட்டோருக்கான பயிற்சி முகாம் கருங்குழியில் நேற்று நடைபெற்றது.

இந்த முகாமிற்கு பயிற்சிக்கு பேரூராட்சி தலைவர் தசரதன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சங்கீதா சங்கர் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் அருள்குமார் அனைவரையும் வரவேற்றார். பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் லதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தூய்மை பணிகள் குறித்து சிறப்புரையாற்றினார்.

இதில், பாதாள சாக்கடை கழிவுநீர் குழாய் பராமரிப்பு, மலக்கசடு கழிவுநீர் சேகரிப்பு தொட்டியை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாமல்லபுரம், திருப்போரூர், அச்சரப்பாக்கம், இடைக்கழி நாடு, திருக்கழுக்குன்றம், உத்திரமேரூர், வாலாஜாபாத், பெரும்புதூர் உள்ளிட்ட பேரூராட்சி செயல் அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள், கணக்காளர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

The post கருங்குழி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Related Stories: