அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைக்கிறார்: நெல்லை மாநகராட்சியில் ரூ.812 கோடி திட்டப் பணிகள்

நெல்லை, அக். 8: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நெல்லை வருகிறார். அப்துல்வஹாப் எம்எல்ஏ கோரிக்கையை ஏற்று பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரே நடக்கும் விழாவில் தாமிரபரணி ஆற்றில் இருந்து பாளையங்கோட்டை புறநகர் பகுதிகளில் 7 வார்டுகளுக்கு தினம் தோறும் குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் ரூ.19.43 கோடியில் புதிய குடிநீர் திட்டமான முறப்ப நாடு குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் ரூ.663.92 கோடியில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை நிறைவேற்றுதல் உள்ளிட்ட ரூ.689.71 கோடி மதிப்பிலான பளிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

தொடர்ந்து நேருஜி கலையரங்கில் நடக்கும் விழாவில் ரூ.122.31 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். இந்த விழாக்களுக்கு தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு, நிதி மற்றும் மனித வள மேம்பாட்டு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். விழாவில் எம்பி, எம்எல்ஏக்கள், கலெக்டர், மேயர், துணை மேயர், மாநகராட்சி கமிஷனர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

The post அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைக்கிறார்: நெல்லை மாநகராட்சியில் ரூ.812 கோடி திட்டப் பணிகள் appeared first on Dinakaran.

Related Stories: