புனித அல்போன்சா கல்லூரியில் பேராசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம்

கருங்கல், அக்.7: கருங்கல் அருகேயுள்ள சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேராசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்நிகழ்விற்குக் கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் பேரருட்தந்தை ஆன்றனி ஜோஸ் தலைமை தாங்கிப் பேசினார். கல்லூரி முதல்வர் அருட்தந்தை முனைவர் மைக்கேல் ஆரோக்கியசாமி, முன்னிலை வகித்தார். வளாக வழிகாட்டி அருட்தந்தை அஜின் ஜோஸ், துணை முதல்வர் சிவனேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக திருச்சி டான் போஸ்கோ தகவல் தொடர்பு துறையின் மேலாண்மை இயக்குனர் அருட்தந்தை ஆரோக்கிய செல்வகுமார் கலந்து கொண்டார். ”மெய்நிகர் உலகில் கல்வி” என்ற தலைப்பில் தகவல் தொடர்பின் முக்கியத்துவத்தைக் குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகளைக் குறித்தும் பேராசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தார். மாறிவரும் சமூகத்தில் பேராசிரியர்கள் தங்கள் திறமைகளை எவ்வாறு வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதைக் குறித்தும் அதன் இன்றியமையாமை குறித்தும் பயிற்சி அளித்தார்.

The post புனித அல்போன்சா கல்லூரியில் பேராசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Related Stories: