சென்னை: திரைப்பட தணிக்கை சான்றிதழ் பெற லஞ்சம் கேட்டதாக விஷால் கூறிய புகாரின் பேரில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. மெர்லின் மேனகா, ஜீஜா ராமதாஸ், ராஜன் ஆகியோர் மீதும் தணிக்கை சான்று அமைப்பு ஊழியர்கள் சிலர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. லஞ்சப்புகார் தொடர்பாக திரைப்பட தணிக்கை வாரிய ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குபதிவு செய்துள்ளது. இந்தியில் மொழி மாற்றம் செய்த படத்துக்கு தணிக்கை சான்று வாங்க சென்றபோது ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்டதாக விஷால் புகார் தெரிவித்திருந்தார். 2 வங்கி கணக்குகளுக்கு லஞ்ச தொகை ரூ.6,54,000 அனுப்பப்பட்டிருந்ததாகவும் விஷால் கூறியிருந்தார். தணிக்கை சான்றிதழ் பெற்றுத்தர இடைத்தரகராக செயல்பட்ட பெண் மேலும் ரூ.20,000-ஐயும் விஷாலிடம் பெற்றதாக தகவல் வெளியானது.
The post திரைப்பட தணிக்கை சான்றிதழ் பெற லஞ்சம் கேட்டதாக விஷால் கூறிய புகாரின் பேரில் சிபிஐ வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.