மார்த்தாண்டத்தில் மழை நீரோடைகளை சீரமைக்க வேண்டும் தொழில் வர்த்தக சங்கம் தீர்மானம்

மார்த்தாண்டம், அக். 4: மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்க மாதாந்திர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தலைவர் அல் அமீன் தலைமை வகித்தார். செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் சுரேஷ் குமார், துணைத்தலைவர் தங்கமணி, செயற்குழு உறுப்பினர்கள் சதீஷ் சந்திரகுமார், தேவராஜ், எபிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மார்த்தாண்டம் மேம்பால பகுதியில் அடைபட்டு இருக்கும் மழை நீரோடைகளை சீரமைக்க வேண்டும். வணிக ரீதியாக செல்லும் வாகனங்கள் செல்ல இடையூறாக மேம்பாலத்தின் கீழ்பகுதியில் சிலர் ஆக்ரமித்து பைக்குகளை நிறுத்துவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மார்க்கெட் ரோடு பகுதியில் மீன்சந்தையில் இருந்து வெளியேறும் கழிவுகள் சாலையில் திறந்து விடப்படுவதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post மார்த்தாண்டத்தில் மழை நீரோடைகளை சீரமைக்க வேண்டும் தொழில் வர்த்தக சங்கம் தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: