முத்துவேடு, களியனூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்: எம்எல்ஏ பங்கேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஒன்றியம் முத்துவேடு, களியனூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், எழிலரசன் எம்எல்ஏ கலந்துகொண்டார். காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம், முத்துவேடு ஊராட்சியில், மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, கிராம சபை கூட்டம், ஊராட்சி மன்ற தலைவர் ஜெனிட்டா பிரசாந்த் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் மலர்கொடிகுமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ எழிலரசன் கலந்துகொண்டு கிராம மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

மேலும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், வரதராஜன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் குமார், துணை தலைவர் சசி, வார்டு உறுப்பினர்கள் பாபு, ஹரிதாஸ், புதினா, சந்திரமதி, சுதாகர், மற்றும் கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர். இதேபோல, காஞ்சிபுரம் அருகே உள்ள களியனூர் ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் வடிவுக்கரசி ஆறுமுகம் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில், துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள், கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அடிப்படை வசதிகளான குடிநீர், சாலைவசதி, தெரு விளக்கு வசதிகளை உடனுக்குடன் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post முத்துவேடு, களியனூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்: எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: