இது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், 400 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீராங்கனை சகோதரி வித்யா ராமராஜ் அவர்களுக்கு, தமிழ்நாடு பாஜக சார்பாக மனம் நிறைந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரி வித்யா ராமராஜ், பாரதத்தின் தங்க மங்கை, பி.டி.உஷா அவர்களின் 39 ஆண்டு கால தேசியச் சாதனையை சமன்செய்து, இறுதிப் போட்டிக்கு நேரடித் தகுதி பெற்றிருக்கிறார் என்பது மிகவும் சிறப்பு. சகோதரி வித்யா ராமராஜ், மென்மேலும் பல சாதனைகள் படைத்து, தேசத்தைப் பெருமைப்படுத்த மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post தடை தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்க்கு அண்ணாமலை வாழ்த்து appeared first on Dinakaran.