எதிரி நாடு என்ற ஜாகா அஷ்ரப் பல்டி; இந்திய ரசிகர்களின் அன்பு அளவிட முடியாதது: பாக். கிரிக்கெட் வாரியம் அறிக்கை

லாகூர்:ஐசிசி உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக ஐதராபாத்தில் வந்து இறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு இந்திய ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஜாகா அஷ்ரப் பாகிஸ்தான் அணி நமது எதிரி நாட்டுக்கு சென்று இருப்பதாக இந்தியாவை மறைமுகமாக தாக்கி பேசினார். இதற்கு இந்திய ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் அணிக்கு உற்சாக வரவேற்பு அளித்த நிலையில் தங்களை அவமானப்படுத்தும் நோக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடந்து கொள்வதாக ரசிகர்கள் கடுமையாக சாடினர். இது தொடர்பாக பிசிசிஐயும் தங்களது அதிருப்தியை தெரிவித்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஜாகா அஸ்ரப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐதராபாத் விமான நிலையத்தில் கிடைத்த இந்திய ரசிகர்கள் அளித்த வரவேற்பு எந்த அளவுக்கு அன்பானது என்பதை காட்டுகிறது. இது போன்ற வரவேற்பு அளித்த இந்தியர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவும், பாகிஸ்தானும் எப்போதெல்லாம் களத்தில் மோதுகிறார்களோ அவர்கள் சரியான போட்டியாளர்களை தவிர எதிரிகள் கிடையாது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போது உலகத்தின் கவனமே இதில் தான் இருக்கும் என்றும் மற்ற போட்டிகளை விட இவ்விரு அணிகளும் மோதும் போதுதான் அதிக முக்கியத்துவத்தை பெறும் என்றும் தெரிவித்திருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலில் எதிரி நாடு என்று ஜாகா அஸ்ரப் பேசிய நிலையில் தற்போது அதற்கான விளக்கம் அளிக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

The post எதிரி நாடு என்ற ஜாகா அஷ்ரப் பல்டி; இந்திய ரசிகர்களின் அன்பு அளவிட முடியாதது: பாக். கிரிக்கெட் வாரியம் அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: