தமிழக பள்ளி கல்வித்துறையின் சார்பில் ஆசிரியர்களை அழைத்து பேச முத்தரசன் வேண்டுகோள்

சென்னை: இ.கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு கடந்த 2013ம் ஆண்டு நடத்தப்பட்ட வெயிட்டேஜ் மதிப்பெண் முறை பின்பற்றப்பட்டது. இதனால், கிராமப்புற மற்றும் முதல் தலைமுறை பட்டதாரிகள் பணிவாய்ப்பை இழந்தனர். அதன்பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழக அரசே முற்றிலும் இந்த வெயிட்டேஜ் முறையை நீக்கிவிட்டு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு பணிநியமன போட்டித் தேர்வு என்ற அரசாணை 149ஐ வெளியிட்டது. ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் முடித்தவர்களில் பாதிப்பேர் ஏறக்குறைய 24000 ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்ட நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீதமுள்ளவர்களுக்கு மட்டும் மற்றுமொரு போட்டித் தேர்வு என்பது முற்றிலும் முரண்பாடாக இருக்கிறது. 2013ம் ஆண்டு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை மறுநியமனப் போட்டித் தேர்விலிருந்து விலக்கு அளிக்க தமிழக அரசு முன்வர வேண்டும். கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை அழைத்து பேசி சுமுக தீர்வுக்கு அரசு முயலவேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post தமிழக பள்ளி கல்வித்துறையின் சார்பில் ஆசிரியர்களை அழைத்து பேச முத்தரசன் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: