புதுக்கோட்டையில் உலக இருதய தின விழிப்புணர்வு பேரணி

 

புதுக்கோட்டை. செப். 30: புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் மற்றும் புதுக்கோட்டை தனியார் மருத்துவமனை இணைந்து உலக இருதய தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடத்தியது. இந்த பேரணியை புதுக்கோட்டை நகர டிஎஸ்பி ராகவி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், நிர்வாகிகள் என பலரும் சைக்கிளில் சென்றவாறு இருதயத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி சைக்கிள் பேரணி கீழ ராஜவீதி, பழனியப்பா கார்னர், பழைய அரசு மருத்துவமனை வழியாக மீண்டும் பழைய பேருந்து நிலையத்தில் பேரணி நிறைவடைந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவர்கள் சுருள்வால், சிலம்பம், இரட்டை சிலம்பம் உள்ளிட்டவர்களை சுழற்றியவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

The post புதுக்கோட்டையில் உலக இருதய தின விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: