மானூர், செப். 30: மானூர் அருகே தெற்குப்பட்டியில் தூய இருதய ஆலயம் உள்ளது. இங்கு வரவு, செலவு விவகாரத்தில் ஆலயத்தை சேர்ந்த அந்தோணி (62) என்பவருக்கும், பால்ராஜ் (45) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் பால்ராஜ் ஆலயத்தின் கதவை பூட்டியதோடு, தன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக அந்தோணி மானூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் எஸ்ஐ கணேஸ்குமார் வழக்குப்பதிவு செய்து பால்ராஜை கைது செய்தார்.
The post மானூர் அருகே முன்விரோதத்தில் மிரட்டல் விடுத்தவர் கைது appeared first on Dinakaran.
