குத்தம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.3.43 கோடி மதிப்பீட்டில் 15 வகுப்பறை கட்டிடங்கள்: அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்

திருவள்ளூர்: குத்தம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.3.43 கோடியில் 15 வகுப்பறை கட்டிடங்களை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார். பூந்தமல்லி அடுத்த குத்தம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.3.43 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 15 வகுப்பறை கட்டிடங்கள், ஆய்வகங்கள், கழிவறை, குடிநீர் வசதி மற்றும் சுற்றுச்சுவர் உள்பட பள்ளிக்குத் தேவையான கட்டிடப் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து இதனை பள்ளியின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

விழாவிற்கு கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் விஜய் ஆனந்த், உதவி செய்ற் பொறியாளர் பாஸ்கரன், ஒன்றியக்குழு தலைவர்கள் பூவை எம்.ஜெயக்குமார், பரமேஸ்வரி கந்தன், ஒன்றிய கவுன்சிலர் வழக்கறிஞர் மாரிமுத்து, ஊராட்சி தலைவர் ராஜசேகர், துணைத் தலைவர் உஷா நந்தினி வரதராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் டி.தேசிங்கு அனைவரையும் வரவேற்றார்.

இந்த விழாவில் அமைச்சர் ஆர்.காந்தி புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்து வாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசுகையில், அரசு பள்ளிகள் என்றாலே கல்வித்தரம் எதிர்பார்த்த அளவு இருக்காது என்றிருந்த மாயை இப்போது உடைபட தொடங்கியுள்ளது. மாவட்டந்தோறும் மாதிரி பள்ளிகள், ஆசிரியர்களின் கற்பித்தல் முறைகள், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், காலை உணவு திட்டம், மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் மாற்றத்தை உருவாக்கி வருகின்றன என்றார்.

இதில் முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி, மாவட்டக் கல்வி அலுவலர் (பொன்னேரி) முஹமது அப்துல்லா, ஒன்றிய நிர்வாகிகள் கந்தபாபு, அண்ணா குமார், சாக்ரட்டீஸ், கட்டதொட்டி குணசேகரன், கந்தன், கதிரவன், பொன்.முருகன், பிரவீன் குமார், பிரதீப், பரணிதரண், உதயகுமார், கார்த்திகேயன், மனோஜ், சிபி, வார்டு உறுப்பினர்கள் அருண்குமார், நிர்மலா ராஜன், யுவராணி செந்தில், தணிகைவேல், லோகநாதன், கண்ணன், ஊராட்சி செயலாளர் முனிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் மணி நன்றி கூறினார்.

* 1,000 பேருக்கு நலத்திட்ட உதவி
ஊத்துக்கோட்டை அருகே தண்டலம் கிராமத்தில், திமுக மாவட்ட இலக்கிய அணி சார்பில் நடந்த கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் அரிதாஸ், துணைத்தலைவர் முல்லை வேந்தன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஜோதி முருகன், வேலு, கஜேந்திரன், நாகராஜ், முனுசாமி, ரஞ்சித், ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைமை செயற்குழு உறுப்பினர் மூர்த்தி, மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பகலவன், ரவி, கதிரவன், உமா மகேஸ்வரி, ரமேஷ், ராமமூர்த்தி, சத்தியவேலு, குணசேகரன், வெங்கடாசலபதி, அபிராமி குமரவேல், லோகேஷ், ரவிக்குமார், ஜெயலலிதா, சம்பத், சுமன், தனசேகர், ராஜேஷ், கோல்டு மணி ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளர்களாக திராவிட இயக்கத்தலைவர் சுப.வீரபாண்டியன், அமைச்சர் ஆர்.காந்தி, மாநில இலக்கிய அணி செயலாளர் கலைராஜன் ஆகியோர் கொட்டும் மழையில் 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். நிகழ்ச்சியில், இலக்கிய அணி இணைச்செயலாளர் நம்பிராஜன், தலைமை கழக பேச்சாளர் சாம்ராஜ், முன்னாள் எம்எல்ஏ சேகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post குத்தம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.3.43 கோடி மதிப்பீட்டில் 15 வகுப்பறை கட்டிடங்கள்: அமைச்சர் காந்தி திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: