குடிப்பதை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை

சிவகாசி, செப்.28: சிவகாசி அருகே மது அருந்துவதை தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டி அண்ணா காலனியை சேர்ந்தவர் பஞ்சவர்ணம் மகன் கருப்பசாமி(23). காச நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர் மது அருந்தி வந்ததால் இவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் விரக்தியடைந்த கருப்பசாமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

The post குடிப்பதை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: