ராஜகன்னி மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு புன்னக்காயலில் தூய்மைப்பணி

ஆறுமுகநேரி, செப். 28: புன்னக்காயலில் உள்ள பிரசித்தி பெற்ற தூய ராஜகன்னி மாதா ஆலயத்தின் 472வது மகோன்னதப் பெருவிழா, இன்று (28ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு தினமும் நவநாள் திருப்பலி, ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. சிகர நிகழ்ச்சியாக அக்.7ம் தேதி காலையில் அன்னைக்கு மகுடம் அணிவிக்கும் நிகழ்ச்சி, மாலையில் சிறப்பு மாலை ஆராதனை, இரவில் தேர் பவனி நடைபெறுகிறது. 8ம் தேதி காலையில் சிறப்பு ஆடம்பர கூட்டுத்திருப்பலி, தொடர்ந்து அன்னையின் தேர் பவனியும் நடக்கிறது. மறுநாள் புனித மிக்கேல் அதிதூதர் திருவிழா நடைபெறுகிறது. தூய ராஜகன்னி மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு தேர் பவனி நடைபெறும் வீதிகள் முழுவதும் புன்னக்காயல் பஞ். தலைவர் சோபியா தலைமையில் தூய்மைப்பணி நடந்தது. இதில் பஞ். துணை தலைவர் மிக்கேல் மற்றும் வார்டு உறுப்பினர்கள், மகளிர் குழுவினர் மற்றும் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து வீதிகளை சுத்தம் செய்தனர்.

The post ராஜகன்னி மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு புன்னக்காயலில் தூய்மைப்பணி appeared first on Dinakaran.

Related Stories: